×

லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதியகட்டிடங்கள் கட்டும் பணி

லால்குடி, செப்.15: லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். திருச்சி லால்குடியில் லால்குடி நகராட்சி மற்றும் சுமார் 78 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளது. இங்கு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் லால்குடி நகர, கிராம பகுதிமக்கள் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என். நேருவிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் தற்போது தரைத்தளம் மற்றும் முதல் தளம் வரை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் குறித்து செயற் பொறியாளர் ரத்தினவேல், உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் அசோக்குமார், ஒப்பந்தகாரர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டறிந்தார். லால்குடி நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம், அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதியகட்டிடங்கள் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Lalgudi Government Hospital ,Lalgudi ,Soundarapandian ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!!