×

சோழவந்தான், சமயநல்லூரில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல்

வாடிப்பட்டி, செப். 15: மதுரை சமயநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் தலைமை வகிக்க, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெத்தணசாமி, கிருஷ்ணன், வீரங்கன், ராஜலெட்சுமி, மணிமேகலை, கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசினை கண்டித்து சமயநல்லூர் தபால் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து சமயநல்லூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின் மாலை விடுதலை செய்தனர். சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் காளிதாஸ், ஜோதி ராமலிங்கம், ஜெயக்கொடி உள்ளிட்டோர் அக்ரஹாரம் தெருவில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தார்.

The post சோழவந்தான், சமயநல்லூரில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Cholavandan, Samayanallur ,Vadipatti ,Communist Party of India ,Samayanallur ,Madurai ,Cholavantan ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...