×

கனிமவள ஆய்வு கூட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் கனிமவள குறித்த ஆய்வு கூட்டம் பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சப் – கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் கலந்து கொண்டார். கூட்டத்தில் தாசில்தார் பேசும்போது, அரசு அனுமதியில்லாமல் இரவு நேரங்களில் சவுடு மண், ஆற்று மணல் மற்றும் கடல் மணல் ஆகிய கனிம வளங்களை இருசக்கர வாகனங்கள், படகுகள் மூலமாகவும் கடத்தப்படுகிறது.

இது போன்று மணல் கடத்தப்படுபவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருவிழா நடைபெறும் போது வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அதிகாரிகள்தான் அறிவுரை வழங்க வேண்டும் என கூறினார். இந்த கூட்டத்தில் துணை வட்டாச்சியர் செந்தில் வருவாய் துறை பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்குவரத்துதுறை, அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post கனிமவள ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mineral Exploration Meeting ,Ponneri ,Tahsildar Mathivanan ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...