×

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: பென் ஸ்டாக்ஸ் கம்பேக்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 2, 3 வாரங்களே உள்ளன. அதற்கேற்ப இந்தியா, ஆஸ்திரேலியா என முன்னாள் சாம்பியன்கள் உட்பட பல நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்து விட்டன. ஆனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இன்னும் உலக கோப்பைக்கான அணியை அறிவிக்கவில்லை. இங்கிலாந்து இப்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த உலக கோப்பை பைனலில் சந்தித்த அணிகள் என்பதால் இந்த தொடர் கவனம் பெறுகிறது. முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதும் உலக கோப்பைக்கான அணியை நியூசி அறிவித்து விட்டது.

ஆனால் இங்கிலாந்து ஆக.16ம் தேதி உலக கோப்பைக்கான தற்காலிக அணியை அறிவித்ததுடன் சரி. அந்த அணியில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் நியூசியுடன் விளையாடி வருகின்றனர். முதல் ஆட்டத்தில் தோற்ற இங்கிலாந்து 2வது ஆட்டத்தில் நியூசியை வீழ்த்தியது. ஆனால் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடந்த உலக கோப்பையின் ஆட்ட நாயகனான ஸ்டோக்ஸ் முழுங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால், அவரை அணியில் சேர்க்கலாமா என்ற பேச்சு எழுந்தது.

ஆனால் நியூசிக்கு எதிரான 3 வது ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182ரன் விளாசி ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று ‘கம்பேக்’ கொடுத்துள்ளார். கூடவே இங்கிலாந்து 181ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. அது இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தனது ஆட்டம் குறித்து ஸ்டோக்ஸ், ‘நான் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறனோ… அந்த விஷயத்தில் என் மனம் தெளிவாக இருப்பது இதுதான் முதல்முறை. நான் தெளிவாக செயல்படுவதுதான் எனது அணிக்கு நான் தரும் பங்களிப்பு. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே களம் காண விரும்பவில்லை. காரணம் தொடக்கத்தில் களம் காணுபவர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இதுவரை 5, 6வது வீரராக தான் களம் கண்டுகள்ளேன். ஒருவேளை 4வது இடத்தில் களமிறங்கினாலும் என் ஆட்டத்தில் மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

The post திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: பென் ஸ்டாக்ஸ் கம்பேக்! appeared first on Dinakaran.

Tags : Ben ,Cricket World Cup ,India ,Australia ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...