×

கேரளா கோழிக்கோட்டில் பரவி வரும் நிபா கிருமித் தொற்று: மேலும் 11 பேருக்கு நிபா தொற்றுக்கான அறிகுறிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் தொற்று பரவி உள்ள நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய மருத்துவக் குழு கோழிக்கோடு விரைந்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று 5-ஆக அதிகரித்துள்ள நிலையில் அவர்களில் 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிருமி பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ள 11 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் மாலைக்குள் தெரியவரும். நிபா கிருமி தடுப்பு நடவடிக்கை குறித்து அஆய்விட ஒன்றிய குழுவினர் கோழிக்கோடு வந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய குழு பிரதிநிதிகளும் பங்கேற்கின்றன. நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

பொது விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். முன்னரே திட்டமிடப்பட்டுள்ள கோயில் திருவிழாக்கள், தேவாலய விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை குறைந்தபட்ச மக்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும் என்று ஆட்சியர் கீதா தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கேரளா கோழிக்கோட்டில் பரவி வரும் நிபா கிருமித் தொற்று: மேலும் 11 பேருக்கு நிபா தொற்றுக்கான அறிகுறிகள் appeared first on Dinakaran.

Tags : Kerala Kozhikot ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...