×

உக்ரைனில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி டெல்லி டாக்டர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இடம் பெற்றுத் தருவதாக கூறி, நவீன் வர்ஷா என்பவரின் தந்தையிடம், 7.41 லட்சம் ரூபாயும், கவியரசு என்பவரது தந்தையிடம் 7.55 லட்சம் ரூபாயும் பெற்று மோசடி செய்ததாக டாக்டர் ஜோஹிதாதித்யா மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி ஜோஹிதாதித்யா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இடம் வாங்கிக் கொடுக்கப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41ன்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விசாரணைக்காக போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரருக்கு வாய்ப்பு அளித்தும், அவர் ஆஜராகவில்லை என்பதால் முன்ஜாமீன் தர முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post உக்ரைனில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி டெல்லி டாக்டர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Ukraine ,Chennai ,Naveen Varsha ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி