×

சதுர்த்தி விழாவில் கலக்க விவசாயி, சிக்ஸ் பேக் விநாயகர் சிலைகள் ரெடி

*ராஜபாளையத்தில் பணிகள் விறுவிறு

ராஜபாளையம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் விதவிதமான வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மக்களை கவர்ந்துள்ளன.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாடிபில்டர் கணபதி, புல்லட் கணபதி, விவசாயி கணபதி போன்ற உருவங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நேற்று ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் இருந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் மேளதாளத்துடன் மாப்பிள்ளை விநாயகர் கோயில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்திக்காக இந்த வருடம் ஆறு விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே ரதத்தில் முன்பக்கம் சோபகிருது கணபதி, பின்பக்கம் உச்சிஷ்ட கணபதி, இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, சிக்ஸ் பேக் வைத்து பளு தூக்கும் ஹேரம்ப கணபதி, விவசாய கணபதி, புல்லட்டில் ஏகாந்த கணபதி என புதுவிதமாக சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை கடந்த ஒரு மாதமாக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஸ்தபதிகள் இணைந்து சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் மரவள்ளிக்கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப்பொருட்களால் உருவாக்கி உள்ளனர்’’ என்றார்.

The post சதுர்த்தி விழாவில் கலக்க விவசாயி, சிக்ஸ் பேக் விநாயகர் சிலைகள் ரெடி appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Chaturthi ,Rajapalayam Rajapalayam ,Rajapalayam ,Vinayagar Chaturthi ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா