- ஆந்திரப் பிரதேசம்
- முதல்வர் ஜெகன்மோகன்
- மோடி
- அமித் ஷா
- திருமலா
- சட்டமன்ற
- சட்டசபை
- முதல் அமைச்சர்
- ஜகன் மோகன்
- தில்லி
திருமலை: ஆந்திராவில் சட்டப்பேரவையை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற முதல்வர் ஜெகன்மோகன் நேற்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் டி.ஜி.பி.ராஜேந்திரநாத், தலைமை செயலாளர் ஜவகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி முக்கிய பிரமுகர்கள் முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஊழல் வழக்கில் கைதானதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் இன்று டெல்லி செல்கிறார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ள அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும், வரும் 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் ஒன்றிய அரசு பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஜெகன்மோகன் ஆதரவு அளிப்பது குறித்தும் சந்திரபாபு கைது சம்பவம் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சந்திரபாபுநாயுடு, லோகேஷ் ஆகியோரை சிறையில் அடைத்து முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை சந்திக்க முதல்வர் ஜெகன்மோகன் திட்டம் வகுத்திருப்பதாகவும், இதற்காக டெல்லி சென்று வந்தவுடன் அமைச்சரவை கூட்டம் நடத்தி அதன்பிறகு சட்டப்பேரவை கூட்டி முன்கூட்டியே தேர்தலை சந்திக்க 21ம் தேதி சட்டப்பேரவையில் முக்கிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post ஆந்திராவில் முன்கூட்டி தேர்தல் நடத்த திட்டம்?மோடி, அமித்ஷாவுடன் முதல்வர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

