×

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்று) போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. ரயிலில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் 13 முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 14ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 15ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 16ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 17ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 18ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 19ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில்வே கால அட்டவணைப்படி, பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால், கடைசி நேர நெருக்கடியில் தவிப்பதைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...