×

டொயோட்டா ரூமியான்

டொயோட்டா நிறுவனம் மாருதி சுசூகியுடன் இணைந்து ரூமியான் என்ற எம்பிவி காரை அறிமுகம் செய்துள்ளது. இது மாருதி சுசூகி எர்டிகா அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 சீட்கள் கொண்ட இந்த காரில் எஸ், ஜி, வி என்ற மூன்று வேரியண்ட்கள் இடம் பெற்றுள்ளன. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கக் கூடியவை. துவக்க ஷோரூம் விலையாக ரூ.10.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் இன்ஜின் பெற்றுள்ளது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும் 137 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட், அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும் 121.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே இடம் பெற்றிருக்கும். பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 20.51 கி.மீ, சிஎன்ஜியில் அதிகபட்சமாக கிலோவுக்கு 26.11 கி.மீ மைலேஜ் வழங்கும் என அராய் சான்றிதழ் வழங்கியுள்ளது.இந்தக் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் இணைப்பு வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், இரண்டாவது வரிசை சீட்களில் கூரையில் பொருத்தப்பட்டுள்ள ஏசி வெண்ட்கள் மற்றும் டொயோட்டா ஐ- கனெக்ட் வசதி ஆகியவை உள்ளன. வேரியண்ட்கள் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும்.

The post டொயோட்டா ரூமியான் appeared first on Dinakaran.

Tags : Toyota Rumian ,Toyota ,Maruti Suzuki ,Toyota Rumyan ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...