×

இங்கி.க்கு எதிரான முதல் ஒன்டே: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி


கார்டிப்: இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 72, டேவிட் மாலன் 54, பென் ஸ்டோக்ஸ் 52 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பவுலிங்கில் ரச்சின் ரவீந்திரன் 3 விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் நாட்அவுட்டாக டெவோன் கான்வே 111, டேரில் மிட்செல் 118 ரன் (91 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினர். 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 297 ரன் எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வதுபோட்டி சவுத்தாம்டனில் நாளை நடக்கிறது.

The post இங்கி.க்கு எதிரான முதல் ஒன்டே: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி appeared first on Dinakaran.

Tags : England ,New Zealand ,Cardiff ,T20 ,Dinakaran ,
× RELATED ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி