×

கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது

பாலக்காடு:பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் தாலுகாவில் பல்வேறு இடங்களிலுள்ள கோவில்களில் புகுந்து உண்டியல் திருட்டு வழக்கில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் தாலுகா பகுதிகளான வாணியம்குளம் நரசிம்மமூரத்தி கோவில், செருகாட்டுப்புலம் பகவதி ஆகிய கோவில்களில் திருடர்கள் புகுந்து உண்டியல் உடைத்து பணம் திருடியது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை சி.சி.டி.வி., கேமரா பதிவின் மூலமாக கண்காணித்து தேடி வந்தனர். இந்நிலையில் ஒத்தப்பாலம் கோதயூர் பகவதி கோவிலின் உண்டியலை உடைத்து திருடர்கள் 10 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை கடந்த 25, 29ம்தேதிகளில் கொள்ளையடித்தனர்.இதனையடுத்து ஒத்தப்பாலம் எஸ்.ஐ., பிரவீண் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் திருச்சூர் மாவட்டம் குருக்கஞ்சேரியைச் சேர்ந்த முரளி (55), கண்ணூர் கொட்டியூரைச் சேர்ந்த டின்ஸ் (32) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் பகல் நேரங்களில் சி.சி.டி.வி., இல்லாத கோவில்களை நோட்டமிட்டு, ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து மறைவிடத்தில் பதுங்கியிருந்து, இரவில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணை தெரியவந்தது. ஒத்தப்பாலம் எஸ்.ஐ., பிரவீண் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Othadapalam taluk ,Dinakaran ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...