×

தொழில்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்

சென்னை: தமிழ்நாடு தொழில் துறை செயலாளராக அருண் ராய் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக இருந்த அருண்ராய் தொழில்துறை செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். ஏற்கனவே, தொழில்துறை செயலாளராக இருந்த எஸ்.கிருஷ்ணன் ஒன்றிய அரசு பணிக்கு சென்றதை அடுத்து தற்காலிகமாக அருண் ராய் நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழில்துறை செயலாளராக அருண் ராய் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Arun Roy ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Industries Secretary ,Industry ,Dinakaran ,
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...