×

பசுபாதுகாப்பு அனைத்து இந்தியர்களின் பொறுப்பு சாஹிவால் பசு மேம்பாட்டுக்கு மத்திய அரசு ₹40 கோடி மானியம்

*அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தகவல்

திருமலை : பசுபாதுகாப்பு அனைத்து இந்தியர்களின் பொறுப்பு என்றும், சாஹிவால் பசு மேம்பாட்டக்கு மத்திய அரசு ₹40 கோடி மானியம் வழங்கியுள்ளது என அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் கோகுலாஷ்டமி பசு பூஜை உற்சவம் நேற்று நடந்தது. இதேபோல் அலிபிரியில் உள்ள சப்த பசு பிரதட்சண மந்திரில் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் பேசியதாவது:

பசு இந்துக்களுக்கு தாய் போன்றது, கடவுளுக்கு சமமாக வணங்கப்படும் பசுவைப் பராமரிப்பது அனைத்து இந்தியர்களின் பொறுப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு சாஹிவால் பசு மேம்பாட்டுக்கு மத்திய அரசு மானியமாக ₹40 கோடியை வழங்கியது. ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலாவில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோபூஜை நடைபெற்று வருகிறது. தேவஸ்தானம் பல ஆண்டுகளாக பசு பாதுகாப்பு திட்டங்களை நடத்தி வருகிறது.

கால்நடைகளை கொண்டு இயற்கை விவசாயம் செய்ய தேவைப்படுபவர்களுக்கு பசுக்கள் வழங்கப்படுகின்றன. முற்காலத்தில் ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் பசுக்கள் இருந்தது. பால் கறவை நின்றதும் மாடுகளை விவசாயிகள் கோசாலையில் கொடுத்தனர். கடந்த காலங்களில் நான் தலைவராக இருந்தபோது வந்தே கோ மாதரம் என்ற சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. இதில் நோபல் பரிசு பெற்ற இருவர் பங்கேற்று மனித குலத்திற்கு எப்படி பசுவின் பொருட்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து விவாதித்தனர். மேலும் இதுபோன்ற மாநாடுகள் வருங்காலத்தில் நடத்தப்படும் என்றார்.

முன்னதால் கலைஞர்கள் கோலட்டம், பஜனைக் குழுக்களுடன் வரவேற்றனர். பின்னர் யானைகளுக்கு கரும்பு, பழங்கள் வழங்கி அங்குள்ள வேணுகோபால சுவாமியை தரிசித்தார். அங்கிருந்து அலிபிரியில் உள்ள பசு கோயிலுக்கு சென்று, பசு மற்றும் கன்றுக்கு சாஸ்திர முறைப்படி பூஜை செய்து, மலர் மாலை அணிவித்து தீவனம் வழங்கி பால் கறந்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்விஜிஓ பராமரிப்பு குழு உறுப்பினர்கள் ராம் சுனில், சிவிஎஸ்ஓ தநரசிம்ம கிஷோர், கோசாளை இயக்குநர் டாக்டர் ஹரநாத், துணை இஓ சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

The post பசுபாதுகாப்பு அனைத்து இந்தியர்களின் பொறுப்பு சாஹிவால் பசு மேம்பாட்டுக்கு மத்திய அரசு ₹40 கோடி மானியம் appeared first on Dinakaran.

Tags : Indians ,Central government ,Sahiwal ,Board of Trustees ,President ,Karunakar ,Tirumala ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...