×

கோடையை கொண்டாட குவிந்தனர்: கொடைக்கானலில் கடும் டிராபிக் ஜாம்


கொடைக்கானல்: கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். அதிகமானோர் வருகையால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் நடைபெற்று வருகிறது. பள்ளி விடுமுறை மற்றும் வார விடுமுறையின் துவக்க நாளான நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருக்கிறது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பிரதான சாலைகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சுற்றுலா இடங்களில் இதேபோல ஒரு மணி நேரம் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் பகல் நேரத்தில் அதிகளவிலான வெப்பம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் இதமான சூழல் நிலவி வருகிறது. சுற்றுலாப்பயணிகள் இந்த மாறுபட்ட சூழலை ரசித்து சென்றனர். மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், ஏரி, பூங்காக்கள், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

The post கோடையை கொண்டாட குவிந்தனர்: கொடைக்கானலில் கடும் டிராபிக் ஜாம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul district ,Princess of the Mountains ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...