×

சுட்டெரித்த கோடை வெப்பத்தால் ஒயின் தயாரிக்கும் தொழில் பாதிப்பு..40%-50% வரை உற்பத்தி வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!!

லண்டன் : வட ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா நாட்டில் கோடை வெப்பத்தால் ஒயின் தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒயின் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கும் துனிசியா கடந்த 19 ஆண்டுகளாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. துனிசியாவில் நடப்பாண்டில் கடந்த ஜூலை மாதத்தில் 100 முதல் 114 பாரன்ஹீட் வரை கோடை வெப்பம் கொளுத்தியதால் ஒயினை நம்பி திராட்சை சாகுபதி செய்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுட்டெரித்த வெப்பம் காரணமாக திராட்சை பழத்தில் சர்க்கரை அளவு குறைந்து இருப்பதால் ஒயின் உற்பத்தி 40% முதல் 50% வரை வீழ்ச்சி அடைந்து இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வெப்ப அலைகள், கடுமையான வறட்சி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பேரிடர்களை எதிர்கொண்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். துனிசியாவை போன்று பிரான்ஸ் மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பிற இடங்களிலும் ஒயின் உற்பத்தி குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுட்டெரித்த கோடை வெப்பத்தால் ஒயின் தயாரிக்கும் தொழில் பாதிப்பு..40%-50% வரை உற்பத்தி வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!! appeared first on Dinakaran.

Tags : LONDON ,Tunisia ,North African ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் காரை அழகான கடையாக...