×

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி, செப். 8: கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கோவில்பட்டியில் செயல்படும் விஸ்வகர்மா உயர்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதை பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் திறந்துவைத்தார். விஸ்வகர்ம மகாஜன சங்க துணைத்தலைவர் சண்முகவேல் குத்துவிளக்கேற்றினார்.இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் சந்திரயான்- 3, எரிமலை, காற்றாலை, பசுமை வீடு, 3 டி, சோலார் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதை திரளானோர் பார்த்து வியப்படைந்தனர். இதில் விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி, பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் அந்தோனிராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முத்து, ஆறுமுகம், சிங்காரவேல், முனியசாமி, விஸ்வகர்ம தொழிலாளர் சங்கச் செயலாளர் மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், சக மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair ,Kovilpatti School ,Kovilpatti ,Vishwakarma High School ,Kovilpatti.… ,Dinakaran ,
× RELATED அறிவியல் கண்காட்சி