×

ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

நாகர்கோவில், செப்.8: ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா பள்ளி துணை தலைவர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. பள்ளி இயக்குநர் சாந்தி, சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவி நிதிஷா வரவேற்றார். தேரூர் ஊராட்சி தலைவர் அமுதாராணி பள்ளி ஆசிரியர்களை சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். தேரூர் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்து சிறந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டினார். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் இளங்கோ ஆசிரியரும், மாணவரும் என்ற தலைப்பில் பேசினார். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர், பள்ளி மருத்துவ குழு தலைவர் டாக்டர் அருணாச்சலம் ஆசிரியர் தினம் குறித்து பேசினார்.

பள்ளி மாணவர் ஜித் ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை சமர்ப்பித்தார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவியர் சார்பில் கேக் வெட்டப்பட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ஜெயா சங்கர், துணை முதல்வர் அஜிதா ஆகியோர் பேசினர். ஆசிரியர் பவித்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவர் நிரஞ்சன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

The post ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Rojavanam International School ,Nagercoil ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்