×

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

ஈரோடு, செப். 8: ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வெள்ளை பேப்பரில் எண்களை எழுதி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில், புளியம்பட்டி போலீஸ் எஸ்ஐ ரபீ தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் ரமணி (33), புளியம்பட்டி ஆசாத் வீதியை சேர்ந்த கலாமணி (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள், 15 லாட்டரி சீட்டு, ரூ.800 ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Puliambatti ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...