×

ஸ்பைசஸ் போர்டில் எக்சிக்யூட்டிவ் பணிகள்

ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்பைசஸ் போர்டில் (Spices Board) காலியாக உள்ள எக்சிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

1. Executive (Marketing): 6 இடங்கள். வயது: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ₹30 ஆயிரம். தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
2. Executive (Development): 8 இடங்கள். வயது: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ₹30 ஆயிரம். தகுதி: Agri/Horticulture/Forestry பாடங்களில் இளநிலை பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Trade Analst: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ₹30 ஆயிரம். தகுதி: பொருளியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianspices.com என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை hrd.sb-ker@gov.in என்ற இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 9.9.2023.

The post ஸ்பைசஸ் போர்டில் எக்சிக்யூட்டிவ் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Spices Board ,Ministry of Commerce of the Union Government ,Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!