வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சென்னை மெரீனா காமராஜர் சாலையில் உள்ள காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும் தங்கள் புகார் மனுக்களை இப்பிரிவுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் புகார்களைத் தடையின்றிப்பதிவு செய்வதற்கு ஏதுவாக, காவல்துறை சார்பில் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக செயலி இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தமிழகக் காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநகர மற்றும் மாவட்ட காவல் துறைக்கு விசாரணைக்கு அனுப்பப்படும். இதனை https://eservices.tnpolice.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான செயலி! appeared first on Dinakaran.
