×

சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சமயபுரம், செப்.7: சமயபுரம் அருகே கூத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ரூ. 55 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள முத்துநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (54). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கடந்த 4 ம் தேதி மாலை வாளாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து சிவகுமார் அன்றிரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்காக அலுவலகம் சென்று விட்டார்.

இந்நிலையில் பணியை முடித்துவிட்டு நேற்று காலை 7 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் உள்ள இரும்பு கேட்டை திறந்து கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஒரு பவுன் கைச்செயின், கழுத்து செயின் ஒரு பவுன், ஒரு பவுன் தோடுகள் என் 3 பவுன் நகைகளும் மற்றும் ரூ. 55ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து சிவகுமார் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவல்அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Koothur ,Dinakaran ,
× RELATED அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு