×

இந்திய பூர்வீகம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்: இங்கிலாந்து பிரதமர் சுனக் பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருப்பதை குறித்து பெருமைப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவருமே இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்றனர். சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியும் இந்தியாவை சேர்ந்தவர்.

இந்நிலையில், இந்தியா தலைமையில் டெல்லியில், வரும் 9, 10 தேதிகளில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சுனக் இந்தியா வருகை தர உள்ளார்.இதனையொட்டி, இ-மெயில் மூலமாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியா உடனான எனது தொடர்பு மற்றும் இந்திய பூர்வீகத்தை குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனது மனைவி இந்தியர், பெருமைமிக்க இந்து இந்திய மக்களுடனும் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும் என்பது அர்த்தமாகும்,” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “கிரிக்கெட் பற்றிய விவாதத்தில் தான் அதிகம் அரசியல் செய்கிறோம். கிரிக்கெட் என்று வரும்போது எனது மகள்கள் இந்தியாவையும், கால்பந்து என்றால் இங்கிலாந்துக்கும் ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

The post இந்திய பூர்வீகம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்: இங்கிலாந்து பிரதமர் சுனக் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : UK ,PM Sunak Purumidam ,New Delhi ,Rishi Sunak ,India ,Rishi Sunak's… ,UK PM Sunak ,
× RELATED கோவிஷீல்டு மட்டுமல்ல…. கோவாக்சின்...