×

அமைச்சர் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியாரை கைது செய்ய வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி புகார்

சென்னை: அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த உத்தரப்பிரதேச சாமியாரை கைது செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என பேசி உள்ளார். அழிக்க வேண்டும்’’ என கூறி இருந்தால் இனப்படுகொலை என்று எடுத்து கொள்ளலாம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்படி கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சிலருக்கு மனவருத்தம் ஏற்பட்டு இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது தான் சரியான செயல், ஆனால் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் என்று அறிவித்து உள்ளார். பரமஹம்ச ஆச்சார்யா உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த தகவல் ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியா உட்பட பொது தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ள உ.பி.சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

The post அமைச்சர் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியாரை கைது செய்ய வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி புகார் appeared first on Dinakaran.

Tags : Indian National League ,Chennai ,Uttar Pradesh ,Minister ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...