×

ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணை

சென்னை: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 11 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூன் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் வாக்கு சீட்டை பெறுவதற்கான கியுஆர் கோடு சீட்டுகளை சிலர் மொத்தமாக அள்ளி சென்றனர்.பிரச்னைக்குரிய பகுதியில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் அங்கு கூடினர். எனவே, மோதலை தவிர்க்க தேர்தல் நடத்தும் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் கபீர் தேர்தலை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும் நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை எப்படி நடத்துவது, உதவிக்கு யாரை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த 2 மாதங்களாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து, தேர்தல் தேதி எப்போது என்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வழக்கறிஞர்கள் உள்ளனர்.

The post ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : iCourt Bar Association ,Madras High Court ,Chennai ,High Court Bar Association ,Chennai High Court ,Judge ,R. Mahadevan ,Mohammad Shafiq ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை...