×

திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் அதிபர் ஜோ பைடன்; வருகையை உறுதி செய்தது வெள்ளை மாளிகை..!!

வாஷிங்டன்: டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. டெல்லியில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இந்தியா வரவிருந்த நிலையில், அவருக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியானது.

இதனால் டெல்லி ஜி20 மாநாட்டில் பைடன் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் பைடனின் பங்கேற்பை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலீவன் கூறியதாவது; வியாழன் அன்று ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் பைடன் இந்தியாவில் டெல்லி நகரத்திற்கு செல்கிறார். வெள்ளிக்கிழமை, அதிபர் பைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, ஜி20 உச்சி மாநாட்டின் உத்தியோகபூர்வ அமர்வுகளிலும் அதிபர் பைடன் பங்கேற்பார் என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரு நாட்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்தே திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கிறார்.

The post திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் அதிபர் ஜோ பைடன்; வருகையை உறுதி செய்தது வெள்ளை மாளிகை..!! appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Joe Biden ,G20 ,Delhi ,White House ,Washington ,US ,President ,Joe Byden ,G20 conference ,White ,House ,
× RELATED பெரியார் பல்கலையில் பல்வேறு...