×

செல்லம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு விழா

திருச்சி, செப்.5: செளடாம்பிகா கல்விக்குழுமத்தின் திருவெறும்பூர் செல்லம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் Infinito 2023 எனும் தலைப்பில் விளையாட்டு விழா நடைபெற்றது. சௌடாம்பிகா கல்விக்குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் செந்தூர்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பத்ம சார்லஸ் போரோமியோ சமாதான புறாக்களை பறக்கவிட்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கல்வியிலும், விளையாட்டிலும் விடா முயற்சி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.

எவரெஸ்ட், காங்கோ, நைல், இண்டஸ் என்ற நான்கு குழுவினர்களின் அணிவகுப்பை தொடர்ந்து பள்ளி விளையாட்டு செயலாளர் மாணவர் பிரஜித் மற்றும் மாணவகுழு தலைவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விளையாட்டு விழாவின் ஒட்டுமொத்த வெற்றிக்கோப்பையை இண்டஸ் அணியினரும், சிறந்த அணி வகுப்பிற்கான கோப்பையை இண்டஸ் மற்றும் எவரெஸ்ட் அணியினரும் பெற்றனர்.

மேலும், பள்ளி மாணவர்களின் பலவித நடனங்கள், தொடர் ஓட்டம், மூவகை தற்காப்பு கலைகள், யோகா, வில்வித்தை, சிலம்பம் என பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பிரமிட் (கூர்நுனி கோபுரம்) சாகசம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் உஷா குமாரசாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

The post செல்லம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Sports Festival ,Chellammal ,Vidyalaya ,CBSE School ,Tiruchi ,2023 ,Chelammal Vidyalaya CBSE School ,Thiruverumpur ,Cheladambika Education Board ,
× RELATED அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கூட்டம்