×

கோத்தகிரியில் எல்பிஎப் பொன் விழா மலர் வெளியீடு

ஊட்டி, செப்.5: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோத்தகிரி கிளையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொன்விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தொடங்கி 50 ஆண்டு கால வரலாறு, தொழிலாளர்களின் கோரிக்கை, தொழிலாளர்களுக்கு பெற்று தந்த நலன் குறித்த நிகழ்வு தொகுக்கப்பட்ட பொன் விழா மலரை எல்பிஎப் நீலகிரி மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்து தொழிலாளர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஆனந்தன், தலைமை சங்க நிர்வாகிகள் ஹெர்குலஸ், தணிக்கையாளர் முருகன், தேவராஜ், யோகரத்தினம், கோபாலகிருஷ்ணன், கிளை சங்க நிர்வாகிகள் தலைவர் ரத்தினகுமார், செயலாளர் குமார், ஊட்டி கிளை தலைவர் சீனிவாசன், சிவப்பிரகாசம், மகாலிங்கம், மேகநாதன், அஞ்சாநெஞ்சன், அனையட்டி சந்திரன், ரவி, பர்ன்சைடு கணேஷ், நிரேஷ்குமார், இயேசு ராஜ் மற்றும் ஓட்டுநர், நடத்துனர், தொழில் நுட்ப பணியாளர்கள், பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரியில் எல்பிஎப் பொன் விழா மலர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : LPF Golden Jubilee Flower Release ,Kotagiri ,Tamil Nadu Government Transport Corporation ,Kothagiri ,Labor Progress Association ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு