×

பெட்ரோல் பாட்டிலுடன் பெண்கள் தர்ணா

கடலூர், செப். 5: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று இரண்டு பெண்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது நுழைவு வாயில் அருகே பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களிடம் இருந்து அந்த பையை பிடுங்கினர். இதையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முஷ்ணம் பகுதியை சேர்ந்த முத்தழகி என்பவர், நான் எனது நிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன்.

அருகில் உள்ள மற்றொரு நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்து வருகிறேன். தற்போது அந்த நிலத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது, பக்கத்து நிலத்துக்காரர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார். இதனால் இரண்டு ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே ஆழ்துளை கிணற்றிலிருந்து குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார். இதன் பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, என்றனர். இதை ஏற்ற அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு சென்றார்.

The post பெட்ரோல் பாட்டிலுடன் பெண்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : dharna ,Cuddalore ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா