நியூயார்க்:கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 4வது சுற்று போட்டிகள் இன்று நடந்தது. ஆடவர் ஒற்றையரில் 2ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 7-5, 6-4 என குரோஷியாவின் போர்னா கோஜோவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், பிரான்சிஸ் தியாஃபோஆகியோரும் 4வது சுற்றில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தனர். மகளிர் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 3-6, 6-1 என டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
செக் குடியரசின் கரோலினா முச்சோவா 6-3,5-7,6-1 என சீனாவின் வாங் சியுவை வென்றார். ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா, 6-3, 6-3 என சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கையும் வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் கால்இறுதிக்கு தகுதி பெற்றார். நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-3, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச், ஜெலினா கால்இறுதிக்கு தகுதி: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.