×

முத்துப்பேட்டை மாற்றுத்திறனாளி ஆசிரியை தேர்வு

முத்துப்பேட்டை, செப். 4: தினகரன் செய்தி எதிரொலியாக, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு முத்துப்பேட்டை மாற்றுத்திறனாளி ஆசிரியை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கல்வி அலுவலர்கள், கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுமதி. மாற்றுத்திறனாளி.இவர் ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதுடன், மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார்.

மேலும் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் இவர் உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார். பெருமைமிக்க இந்த மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்க வேண்டும் என ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை சுட்டிக்காட்டி கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அன்று, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

The post முத்துப்பேட்டை மாற்றுத்திறனாளி ஆசிரியை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Muthuppett ,Muthuppet ,Dinakaran ,Tamil Nadu government ,Radhakrishnan ,Muthupett ,
× RELATED நிழற்குடையில் ஆதரவற்ற நிலையில்...