×

21 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல், செப்.4: நாமக்கல் -கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை, தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 2 மணி நேரமும் செயல்படுகிறது. தினமும் 200க்கும் அதிகமான விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி விற்பனை அதிகளவில் நடைபெறும். ஆவணி மாதம் தொடர் முகூர்த்தத்தையொட்டி, தற்போது காய்கறி விற்பனை அதிகரித்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு காய்கறி வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

ஒரே நாளில், 18 ஆயிரத்து 180 கிலோ காய்கறிகள், 2,900 கிலோ பழங்கள் மற்றும் 20 கிலோ பூக்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 100 கிலோ விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்த சுமார் 5 ஆயிரம் பேர் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். உழவர் சந்தையில் நேற்று ₹7 லட்சத்து 34 ஆயிரத்து 90 மதிப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 21 டன் காய்கறி, பழங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal-Kotai road ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!