×

முஸ்லிம் மாணவர்களை ‘பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என திட்டிய ஆசிரியை பணியிட மாற்றம்

ஷிவமொக்கா: இஸ்லாமிய மாணவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று திட்டிய ஷிவமொக்கா அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 9 ஆண்டுகளாக கன்னட ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மஞ்சுளா தேவி.

அப்பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களை நீங்கள் ’பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்று கூறியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அரசுப்பள்ளி ஆசிரியை மஞ்சுளா தேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போலீசார் மஞ்சுளா தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post முஸ்லிம் மாணவர்களை ‘பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என திட்டிய ஆசிரியை பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Shivmokka ,Shivmokka government ,Shivamogga ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...