×

புதுப்பள்ளி தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. வேட்பாளர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி நாள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து காலியான புதுப்புள்ளி தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனும், இடதுசாரி கூட்டணி சார்பில் ஜெய்க் சி.தாமசும், பாஜ சார்பில் லிஜின் லாலும் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியை தக்கவைக்க காங்கிரசும், அந்த கட்சியிடம் இருந்து தொகுதியை கைப்பற்ற இடது முன்னணியும், பாஜவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. இதனால் இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் இந்தத் தொகுதியில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் அனைவரும் புதுப்பள்ளியில் முகாமிட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி தலைவர்கள் கடந்த சில வாரங்களாக இங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்த கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே. அந்தோணியும், பாஜ வேட்பாளர் லிஜின் லாலை ஆதரித்து இவரது மகன் அனில் அந்தோணியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 5ம்தேதி (நாளை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம்தேதி ஆகும்.

The post புதுப்பள்ளி தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Pudupally ,Thiruvananthapuram ,Pudupalli ,Kerala ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...