×

இந்திய ஒற்றுமை நடை பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு: மாவட்ட அளவில் யாத்திரைகளை நடத்த காங். திட்டம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி மாவட்ட அளவில் யாத்திரைகளை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசின் வெறுப்புணர்வு அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டார். 2022 செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 2023 ஜனவரி 30ம் தேதி ஜம்முவின் நகரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் நிறைவடைந்தது.

4,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து உரையாடினார். ராகுலின் இந்திய ஒற்றுமை நடை பயணம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை வெற்றிக்கு வழி வகுத்தது. இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடை பயணம் தொடங்கி வரும் 7ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை நினைவு கூரும் வகையிலும், விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் வெற்றி பெறவும் மாவட்ட அளவிலான ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

The post இந்திய ஒற்றுமை நடை பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு: மாவட்ட அளவில் யாத்திரைகளை நடத்த காங். திட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Unity Walk ,Congress ,New Delhi ,India Unity Walk ,Union BJP ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...