×

மணக்குடியில் ஜூனியர்ரெட் கிராஸ் சேவை, பயிற்சி வகுப்பு

வேதாரண்யம், செப்.3: வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜூனியர் ரெட்கிராஸ் சேவை மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில், குறிச்சி அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜூனியர் ரெட் கிராஸ் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மரக்கன்றுகள் வழங்கினார். ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன், சுமன், வேம்பரசி, சுபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

The post மணக்குடியில் ஜூனியர்ரெட் கிராஸ் சேவை, பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Red Cross Service ,Manakudy ,Vedaranyam ,Thalai Sunday ,Manakudi Panchayat Union Middle School ,Nagapattinam District School Education Department ,Manakudi Junior Red Cross Service ,Dinakaran ,
× RELATED கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு