×

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

மல்லசமுத்திரம், செப்.3: மல்லசமுத்திரம் அருகே பெரிய கொல்லப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் திருமலை தலைமை தாங்கினார். ஈஸ்வரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், எலும்பு முறிவு மற்றும் சர்க்கரை, கண் மருத்துவம், பொது மருத்துவம், ஈ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ பிரிவுகளான பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் பொது அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு, இயன்முறை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, யோகா ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் கண்டறிதல், இ.சி.ஜி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ரத்த அணுக்கள், ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில், 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி, ஊட்டச்சத்து மையம் சார்பில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. கர்ப்பிணி தாய்மார்கள் 10 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீசன், பேரூராட்சி துணைத் தலைவர் மனோரஞ்சிதம், வார்டு உறுப்பினர்கள் யுவராஜ், நளினி சுந்தரி, அண்ணா ராஜன், ரஞ்சித் குமார், ராஜசேகர், வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Varumun ,kapom ,Mallasamutram ,Periya Mukhilili ,Dinakaran ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்