×

முத்துப்பேட்டையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம்

 

முத்துப்பேட்டை, ஜூலை 27: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் துவக்கி வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் பேசினார்கள்.
முகாமில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், இயன் முறை மருத்துவம், ஈசிஜி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அரசு மருத்துவர்கள் டாக்டர் விக்னேஸ்வரி, டாக்டர் பிரியதர்ஷினி, டாக்டர் ராமதாஸ், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன், பகுதி சுகாதார செவிலியர் இந்திராணி, செவிலியர் அனுராதா, கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் சக ஊழியர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

The post முத்துப்பேட்டையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Varumun ,Muthuppet ,Kappom ,Marudangaveli Panchayat Union Middle School ,Muthupet ,District Medical Officer ,Dr. ,Killivalavan.… ,Varumun Kappom ,Muthupettai ,
× RELATED பெரிய வெண்மணி கிராமத்தில் கலைஞரின்...