×

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 9ம் தேதி முற்பகல், பிற்பகல் மற்றும் 10ம் தேதி முற்பகலில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்(ஹால் டிக்கெட்)தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Tamil Nadu ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...