×

தமிழக அரசு உத்தரவு 500 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79.28 கோடி ஒதுக்கீடு

சென்னை: 2023-2024ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், “வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித் தரப்படும்” என்றார். அதை செயல்படுத்தும் வகையில், 2023-2024ம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79,28,40,000 நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1500 வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

The post தமிழக அரசு உத்தரவு 500 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79.28 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Adi Dravidar ,Minister ,N. Kayalvizhi Selvaraj ,
× RELATED டாக்டர் எழுதுவது புரியலையா?.....