×

ஈரோடு மாவட்டத்தில் 3வது நாளாக மழை

 

ஈரோடு, செப். 2: ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக கொடுமுடியில் 86 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக கொடுமுடியில் 86.80 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஈரோட்டில் 37 மிமீ, கோபி 9.20, பவானி 32.80, பெருந்துறை 28, நம்பியூர் 48, தாளவாடி 3.10, மொடக்குறிச்சி 3, கவுந்தப்பாடி 4.20, குண்டேரிப்பள்ளம் 3.40, வரட்டுப்பள்ளம் 11.40 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 15.88 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு திறப்பட்ட தண்ணீர் 500 கன அடியில் இருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு மாவட்டத்தில் 3வது நாளாக மழை appeared first on Dinakaran.

Tags : Erode district ,Erode ,Kodumudi ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...