×

மணிகண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேரிகாட் அமைப்பு

 

திருவெறும்பூர், செப் 2: திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே அளுந்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீசார் மூலம் பேரி காட் அமைக்கப்பட்டது. திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் என கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களில் அளுந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவ, மாணவிகள் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வருவதும், சாலையை கடந்தும் சென்று வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் இடைவிடாது இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் வேக கட்டுப்பாடு இல்லாமல் அதி வேகமாக செல்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது.

எனவே இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு நேற்று தகவல் தெரிவித்து கோரிக்கையாக வைத்தனர். அதன் அடிப்படையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சில மணி நேரத்தில் எஸ்பி வருண்குமார் அதிரடியாக திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் போக்குவரத்து பிரிவு போலீசார் மூலம் பேரிகார்ட் (தடுப்பு வேலி)அமைத்து கொடுத்தார். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எஸ்பிக்கு நன்றி தெரிவித்தனர்.

The post மணிகண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேரிகாட் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Manikandam ,Thiruverumpur ,Alundur ,Tiruchi-Madurai National Highway ,Dinakaran ,
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே தேசிய...