×

ஏற்கனவே 4 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் திருப்பதி மலைப்பாதையில் 5வது சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி கேமராவில் பதிவானதால் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ஏற்கனவே 4 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், 5வது சிறுத்தை நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா தலைமை தாங்கி பேசியதாவது:

4 சிறுத்தைகள் பிடிபட்டதால் இனி இப்பகுதியில் இருக்காது என்று நினைத்த நிலையில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் கேமிராவில் பதிவாகி உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்றதில் காயங்களுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சிறுமியை சிறுத்தை கவ்விக்சென்று கொன்றது. இந்த சம்பவங்களில் இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், 5வதாக மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏற்கனவே 4 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் திருப்பதி மலைப்பாதையில் 5வது சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி கேமராவில் பதிவானதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati mountain pass ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...