×

70% வாக்குகளுடன் முன்னணி சிங்கப்பூர் அதிபராகிறார் தமிழர் தருமன்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான பிரசாரம் வரும் 30ம் தேதியுடன் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தினம், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் காலை முதல் விறுவிறுப்பான வாக்குபதிவு நடந்ததால், மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர்.

மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. அதன் பிறகு, வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இதற்கான முடிவுகள் அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும். இதில், 8 மணிக்கு பிறகு நடந்த மாதிரி வாக்கு எண்ணிக்கையில், தமிழரான தருமன் சண்முகரத்தினம் 70% வாக்குகளை பெற்று முன்னிலை வகிப்பதால் சிங்கப்பூரின் அடுத்த அதிபராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

The post 70% வாக்குகளுடன் முன்னணி சிங்கப்பூர் அதிபராகிறார் தமிழர் தருமன் appeared first on Dinakaran.

Tags : Tharuman ,Singapore ,President ,Halimah Yacob ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி