×

விருதுநகர் நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 

விருதுநகர், செப்.1: விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், 3 மாதங்களாக உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் நகராட்சியில் இல்லை. இதனால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி காங்கிரஸ், மார்க்சிஸ்ட், அதிமுக, அமமுக, சுயேட்சை என 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, பேசிய தலைவர், அமைச்சரிடம் பேசி உதவி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களை வரவழைக்க ஏற்பாடு செய்வோம் என்றார்.

தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தினர் தெருக்களில் ஒழுங்கற்ற முறையில் தோண்டி கம்பம் நடுகின்றனர். அப்போது, வயர்களையும் அறுத்து விடுகின்றனர். இதனால், தெரு விளக்குகள் எரியவில்லையென உறுப்பினர்கள் மணிமாறன், ஹேமா ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆணையாளர் லீனா சைமன் அவர்களை பணிகளை நிறுத்தி, நேரில் வரவழைத்து எச்சரிப்போம் என்றார். இதன்பிறகு நடைபெற்ற கூட்டத்தில், கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மின் மோட்டார்களை தொடர்ந்து இயக்க மறுக்கின்றனர்.

இதனால், குடிநீருடன் கழிவு நீர் சேர்ந்து வருகிறது என உறுப்பினர்கள் ஜெயக்குமார், சுல்தான் அலாவுதீன் புகார் தெரிவித்தனர். பின்பு பேசிய தலைவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் செய்யப்படும் என உறுதியளித்தார். சாத்தூர் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்திமிடம் கட்ட பாதி தொகை கடனாகவும், மீதி மானியமாகவும் வருவது குறித்த தீர்மானத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள், ஏற்கனவே, நிதி நிலை மோசமாக உள்ளது. எனவே, முழு மானியமாக நிதியை கேட்டு பெற வேண்டுமென தெரிவித்தனர். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.

The post விருதுநகர் நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,City Council ,Madhavan ,Virudhunagar Municipality ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...