×

தொண்டி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

தொண்டி. செப்.1: நமது ஊர் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஐக்கிய ஜமாத் சார்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு இணைந்து தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை நமது ஊர் நமது பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் வழங்கும் நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா தலைமை, அனைத்து சமுதாய தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

ஐக்கிய நல கூட்டமைப்பு பொது மேலாளர் முகம்மது பாருக் நமது ஊர் நமது பொறுப்பு குறித்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி அரசு மருத்துவமனையின் சேவைகள் குறித்தும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் பேசினர். திருவாடானை வட்டார ஐக்கிய ஜமாத் கவுரவ தலைவர் அபுபக்கர், இந்து பரிபாலன சபை தலைவர் சேகர், தொண்டி பங்குதந்தை வியாகுல அமிர்தராஜ் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐக்கிய நல கூட்டமைப்பு ஜான் முகம்மது நன்றி கூறினார்.

The post தொண்டி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thandi Hospital ,United Jamaat ,
× RELATED கோவை மாவட்டத்தில் நாளை ரம்ஜான் தொழுகை