×

பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் – என மொத்தம் 3,359 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே.

இத்தேர்விற்கு tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044 – 27660250, 6382433046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

The post பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,District ,Collector ,Alby John Varghese ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்