×

மார்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மது விற்ற வியாபாரி கைது

மார்த்தாண்டம், செப்.1: மார்த்தாண்டம் அருகே பாகோடு ஏலாக்கரைவிளையை சேர்ந்தவர் சசி (42). கூலித்தொழிலாளி. அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். தனது கடையில் மதுபாட்டில்களை வாங்கி, அதை அதிக விலைக்கு விற்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மார்த்தாண்டம் போலீஸ் எஸ்ஐ வினிஷ் பாபு, சசி பதுக்கி வைத்திருந்த 20 மதுபாட்டில் மதுவை பறிமுதல் செய்தார். இதுகுறித்து சசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சசி ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மார்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மது விற்ற வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Sasi ,Bagoda Elakaraivilai ,Dinakaran ,
× RELATED இனிமே இவர் பரோட்டா சூரி இல்ல! - Sasi Kumar Sppech at Garudan Success Meet | Soori.