×

மஞ்சள் நிற மலர்கள் .. ஆரஞ்சு பழம்..!: வியாழக்கிழமைகளில் சாய்பாபாவிற்கு படைக்க சிறந்தவை…!!

சாய்பாபா, ஷீரடியில் மட்டுமின்றி பல இடங்களிலும் பல அதிசயங்களை நிகழ்ச்சி வருகிறார். சாய்பாபாவை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை சொல்லப்படுகிறது.

இந்து மதத்தில் மிக பிரபலமான ஆன்மிக குருவாக விளங்கக் கூடியவர் ஷீரடி சாய்பாபா. இவரை சிவ பெருமானின் அம்சமாகவும், தத்தாரேயரின் வடிவமாகவும் நினைத்து வழிபடுபவர்கள் ஏராளம். மனித உருவில் வந்த கடவுளாகவும், மகானாகவும், குருவாகவும் பலர் சாய்பாபாவை போற்றுகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் சாய் பக்தர்களும், சாய் வழிபாட்டு தலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். சாய்பாபா, ஷீரடியில் மட்டுமின்றி பல இடங்களிலும் பல அதிசயங்களை நிகழ்ச்சி வருகிறார். இப்போதும் பலர் சாய் தரிசனத்தை பெற்று வருகிறார்கள். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் பலரும் சாய் பக்தர்களாக இருந்து வருகிறார்கள். இந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிகமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்லும் தலமாக ஷீரடி அமைந்துள்ளது.

சாய் பாபாவிற்கு அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். இதற்கு காரணம் இவர் யார் என்ன வேண்டினாலும் உடனடியாக நிறைவேற்றி விடுவார். பிரதி வியாழக்கிழமை தோறும் அவருக்கு பிடித்த உணவை படைத்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர்.
சாய்பாபாவை நினைத்து மேற்கொள்ளும் விரதம் மிக எளிதானது.

9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்ல பலன்களை பெற்றுத் தரும். சாய்க்கு சில உணவு வகைகல் மிகவும் பிடித்தமானவையாக இஉர்க்கிரது. அவற்றிள் காய்கறிகளில் சாய்பாபாவிற்கு பிடித்தமான உணவு பசலைக் கீரை அதனால் இதை வியாழக்கிழமைகளில் படைத்து வணங்குகிறார்கள். ரவையால் ஆன அல்வாவை வியாழக்கிழமைகளில் சாய்பாபாவிற்கு படைப்பது நல்ல பயனை தரும். சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமான உணவு கஞ்சி அல்லது கூழ் மட்டுமே, இதை வியாழக்கிழமைகளில் படைத்து வணங்கினால் நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும்.

எல்லா மதத்தினருக்கும் தேங்காய் முக்கிய பொருளாக கருதப்படுகிறது. சாய்பாபாவிற்கும் இது மிகவும் பிடித்தமான உணவாகும். மஞ்சள் நிற மலர்கள் சாய்பாபாவிற்கு விருப்பமான பூவாகும். சாமந்தி அல்லது சூரிய காந்தி போன்ற பூக்கள் சாய்பாபாவிற்கு ரொம்ப பிடிக்கும். பழ வகைகளில் ஆரஞ்சு பழம் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும். இதை வியாழக்கிழமைகளில் படைத்து வேண்டியவற்றை நினைத்தால் உடனே நடக்குமாம்.

The post மஞ்சள் நிற மலர்கள் .. ஆரஞ்சு பழம்..!: வியாழக்கிழமைகளில் சாய்பாபாவிற்கு படைக்க சிறந்தவை…!! appeared first on Dinakaran.

Tags : Sheeradi ,
× RELATED தன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்