×

புதுக்கோட்டை அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி

திருமயம், ஆக. 31: புதுக்கோட்டை அருகே இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, கீழத்தூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கண்ணதாசன் (28). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து காரையூருக்கு அவரது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயம் அருகே பெல் நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கண்ணதாசனின் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருமயம் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்ெறாரு விபத்து: அரிமளம் அருகேயுள்ள வம்பரம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (51). இவர் கே.புதுப்பட்டியில் இருந்து அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் கணேசன் சென்ற பைக் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கே.புதுப்பட்டி போலீசார், கணேசனின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான பேராவூரணியை சேர்ந்த கருப்பையன் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

The post புதுக்கோட்டை அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tirumayam ,Pudukottai district ,Alangudi ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...